Latestமலேசியா

கேளிக்கை மையங்களில் சோதனை; 30 வகை பானங்களில் போதைப்பொருள்!

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.1- கேளிக்கை மையங்களில் விற்கப்படும் 30 வகை பானங்களில் போதைப்பொருள் கலக்கப்பட்டிருப்பதை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது. அமலாக்கத் துறையினரிடமிருந்து தப்புவதற்காக இத்தகைய குறுக்கு வழி கையாளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஈராண்டுகளாக நாடு முழுவது உள்ள கேளிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் வாயிலாக இது கண்டறியப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஶ்ரீ முகமட் சால்லே தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கேள்விக்கை மையங்களில் விநியோகிக்கப்படும் தேநீர், குளம்பி, குளிர்பானம் ஆகிய பானங்களில் ஏராமின் 5, கெத்தாமின், ஷாபு, ஊக்க மருந்து போன்ற போதைப்பொருள் வகைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த பானங்களைத் தயாரிக்கும் ஆலைகளில் இந்த குற்றச்செயல் நடக்கவில்லை. கேளிக்கை மையங்களுக்கு வந்ததும்தான் அவற்றில் போதைப்பொருள் கலக்கப்படுகிறது.

கேளிக்கை மையங்களில் கிடைக்கும் இந்த பானங்கள் வருங்காலங்களில் உள்நாட்டுச் சந்தைக்கும் வரலாம் என்பதையும் டத்தோஶ்ரீ முகமட் சால்லே மறுக்கவில்லை. ஏனெனில், சம்பந்தப்பட்ட பான வகைகள் மக்கள் விரும்பி அருந்துபவையாகும் என்றார் அவர்.

அதனால், கடைகளில் பானங்கள் வாங்கும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்திற்கும் சம்பந்தப்பட்ட பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை என்றாலும்கூட இதனால் அவற்றின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால், இந்த பானங்களை பேக்கேட் செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker