Latestமலேசியா

சிறப்பு மலேசிய கார் பதிவு எண்கள்! இன்றே முந்துங்கள்!

சிரம்பான், ஆகஸ்டு.1-“மலேசியா 1”, முதல் “மலேசியா 10” வரை சிறப்பு கார் பதிவு எண்கள் குறைந்தது 10,000 ரிங்கிட்டுக்கு ஏலம் விடப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அதற்கான ஏலம் இன்று முதல் ஆகஸ்டு 15-ஆம் தேதி வரை நடத்தப்படும். 11 முதல் 19 வரை, 22 முதல் 99 வரை இரட்டை எண்கள், 111 முதல் 999 வரையிலான மும்முறை எண்கள் ஆகியவை குறைந்தது 2,000 ரிங்கிட்டிற்கு விற்கப்படும்.

சிறப்பு கார் பதிவு எண்களை வாங்க விரும்புவோர் ஜேபிஜே எனப்படும் சாலைப் போக்குவரத்துத் துறை அலுவலகங்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், “மலேசியா 2020” என்ற பதிவு எண்கள் மட்டும் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்காக பிரத்தியேகமாக ஒதுக்கி வைக்கப்படும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker