Latestமலேசியா

செம்போர்னாவில் தீ: 100 வீடுகள் அழிந்தன

சபா, ஆகஸ்டு.1- செம்போர்னாவில் உள்ள கம்போங் ஆயர் ஹுஜோங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் அழிந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் இத்தீவிபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் செம்போர்னா,குனாக், மற்றும் தாவாவில் இருந்து  48 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சபா தீயணைப்பு, மீட்புக் குழுத் தலைவர் கத்திஸா ரஹாபான் கூறினார்.

தொடக்கத்தில் 10 வீடுகளில் மட்டுமே தீப்பற்றியது எனவும் பலத்த காற்றினால் தீ அக்கிராமத்தில் இருந்த நான்கு சிறிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் பரவியது எனவும் அவர் சொன்னார்.

தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமது வீரர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக செம்போர்னா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றார் கத்திஸா.

முதலில் தீப்பற்றிய வீடு அடையாளம் காணப்பட்டாலும் தீ விபத்துக்கான காரணம் இன்னமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker