Latestஉலகம்

பல மில்லியன் மக்களைக் கொல்லுமா கொடிய நோய்? -ஓர் எச்சரிக்கை

பெர்லின், ஆக.1- சுவாசத் தொகுதி வைரஸ் வகையைச் சார்ந்த பராஇன்புளுவென்சா கிளேட் எக்ஸ் எனப்படும் நோய் இருமல் மூலம் பரவுகிறது. இதுவரைக்கும் ஜெர்மனி முதல் வெனின்சுலா வரை 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் 50 இறப்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நோயாளிகள் காய்ச்சல், இருமல், குழப்பமான மனநிலையுடன் காணப்பட்டனர். சிலர் மூளை வீக்கத்துக்கு ஆளானதுடன் அவர்கள் கோமா நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர்.

இந்நோய்க்கு காரணமான வைரஸை அடையாளப்படுத்த முடிந்திருக்கிறது. இது ஒரு புதுவகை பராஇன்புளுவென்சா வைரஸ். இது சுவாசத் தொகுதி வைரஸ் வகையைச் சார்ந்தது. இதை விஞ்ஞானிகள் பராஇன்புளுவென்சா கிளேட் எக்ஸ் (parainfluenza clade x ) எனப் பெயரிட்டுள்ளனர்.

இது இருமல் மூலம் பரவுகிறது. இதற்கான கடும் அறிகுறிகள் வெளிப்பட இரு வாரங்கள் ஆகிறது தொற்றும் தன்மையுடையது.

இது தொடர்பாக மருத்துவ மையம் ஒன்று மேற்கொண்ட கணிப்பு ஒன்று ஓர் அபாயகரமான விளைவுகளை எச்சரிப்பதாக அமைந்துள்ளது.

இந்நோய் உலக அளவில் பரவத் தொடங்கினால் 20 மாத இடைவெளிக்குள் கடந்த பின் 150 மில்லியன் இறப்புகளை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி விடும். அமெரிக்காவில் மட்டும் 15-முதல் 20 மில்லியன் மக்கள் மடியக்கூடிய அபாயம் உள்ளது.

தடுப்பு மருந்தும் இல்லாதிருப்பின் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம். தடுப்பு மருந்து உருவாக்கம் தோல்வியடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 900 மில்லியனாக இருந்திருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker