Latestமலேசியா

மாணவர் முழக்கம்: நவினுக்கு காசல்பீல்டு பள்ளியில் பாராட்டு விழா

பூச்சோங், ஆகஸ்ட், 1 –மாணவர் முழக்கம்-2018 பேச்சுப்போட்டியில் இரண்டாம் நிலை வெற்றியாளராக வாகை சூடிய பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி மாணவர் நவின் செல்வசுப்பிரமணியத்திற்கு பள்ளியில் மாபெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

வணக்கம் மலேசியாவும் ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தமிழ்பள்ளிக்கான இந்தப் பேச்சுப்போட்டியில், நவின் செல்வசுப்பிரமணியம் 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.

அவருக்கு வெற்றிக்கோப்பை, 2,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றிப் பெற்ற நவினுக்கு பள்ளியில் ஆசிரியர்கள் முன்னிலையில் பாராட்டு விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. நவினுக்கு கிரிடம் அணிவிக்கப்பட்டு சகமாணவர்கள் முன்னிலையில் பாராட்டப்பட்டார்.

இவரது வெற்றியை சக மாணவர்கள் ஆர்வத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளி ஆசிரியர்கள் அவரது வெற்றிக்கு வாழ்த்து கூறியதோடு அவருக்கு பாராட்டை வழங்கினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker