Latestஇந்தியா

கருணாநிதியை பார்க்க வந்தார் நடிகர் அஜித்! -பின்னணி என்ன?

சென்னை, ஆக. 2- காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் அஜித்.

சினிமா விருதுகள், பொது நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தவிர்க்கும் அஜித், கருணாநிதியை சந்திக்க வந்ததற்கு காரணம் கூறப்படுவது அஜித்தின் மனிதாமானம் மற்றும் உடல் நலத்திற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமாகும்.

யாராவது உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் எனத் தெரிந்தால் அங்கே அவரது உதவி, முதல் உதவியாக இருக்கும். அவரது கண் மருத்துவர் விஜய்சங்கர் மூலம் 5 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் செய்து கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பு களத்தில் அஜித் எப்போதும் ஒரு முதலுதவி உபகரணத்தை தயார் நிலையில் வைத்திருப்பார். வேதாளம் படப்பிடிப்பில் அப்படி தான் ஒருவருக்கு விபத்து ஒன்று நடந்தது.

அப்போது அஜித் உடனடியாக போன் செய்து அந்த இடத்திற்கே மருத்துவர்களை வரவழைத்து விட்டார். அந்தளவுக்கு உடல் நிலைக்கு ஏதாவது என்றால் முக்கியத்துவம் கொடுக்கத் தயங்காதவர் அஜித்.

காலில் அறுவை சிகிச்சை, முதுகில் அறுவை சிகிச்சை, கைகளில் அறுவை சிகிச்சை என பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ள அஜித் யாரை முதலில் பார்த்தாலும் கேட்கும் முதல் கேள்வி, அப்பா- அம்மா நல்லா இருக்காங்களா? உடல் நிலை நல்லா இருக்கா? என்பது தான்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker