Latestமலேசியா

கே.எல் டவரைத் தாக்கும் மின்னல்; ஓர் அபூர்வப் படம்!

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.2- வானத்தில் மின்னல் அடிக்கும்போது வெளியில் செல்லாதீர்கள், வெறும் கண்ணால் மின்னலைப் பார்க்காதீர்கள் என நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இங்கு அஸ்னில் இஷாக் என்ற ‘மலாய் மெயில்” பத்திரிக்கையின் புகைப்படக் கலைஞர் நேற்று கோலாலம்பூர் கோபுரத்திற்கு மேலே தோன்றிய மின்னலை தனது கேமராவில் கிளிக் செய்துள்ளார். அதிலும், கார் முகில்களில் மத்தியில் பளிச்சென்று தோன்றிய அந்த மின்னல் கோலாலம்பூர் கோபுரத்தின் உச்சியைப் போய்த் தொடுவது போல இருந்ததுதான் அஸ்னில் பிடித்த படத்தின் அழகே.

2015-ஆம் ஆண்டு முதல் மின்னலை விதவிதமாகப் படம் பிடித்துவரும் 26 வயது அஸ்னில் இந்த மின்னல் படத்தை பிடித்ததில்தான் தான் வெற்றிக் கண்டுள்ளதாக உணர்கிறாராம்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த மின்னல் படம் பலரையும் கவர்ந்துள்ளது. பலர் அதனை தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது மட்டுமின்றி, அஸ்னிலின் இந்த அழகிய படம் இன்றை “மலாய் மெயில்” முதல் பக்கத்தையும் அலங்கரித்தது.

நேற்று கொட்டும் மழையில் அஸ்னில் தனது ஸ்கூட்டர் வண்டியில் மின்னலை துரத்தி துரத்தி படம் பிடித்திருக்கிறார். அப்போது தற்செயலாகப் பிடிக்கப்பட்டதுதான் இந்த படம். இந்த படத்தை பிடிக்க அவர் காத்திருந்த தருணங்கள் அவருக்கு மட்டுமே சொந்தமானவை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker