Latestமலேசியா

டாக்டர் ஸஹாருடின், ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

புத்ராஜெயா,ஆகஸ்ட்.2- சிலாங்கூர், ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஸஹாருடின் படாருடின் இன்று புத்ராஜெயா மருத்துவமனையில் மாலை 6.28 மணிக்கு காலமானார்.

அவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது.

அவரது நல்லுடல் டேசா பிங்கிரான் புத்ராவிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வேளை, அவரது நல்லுடல் நாளை அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14-ஆவது பொதுத்தேர்தலின்போது, ஸஹாருடின் 29,250 வாக்குகளைப் பெற்று தேசிய முன்னணியின் யூசோப் எம்.ஹனிப்பையும், பாஸின் முகமட் கஸாலியையும், சுயேட்சை வேட்பாளர் எஸ்.விக்னேஸ்வரனையும் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker