Latestமலேசியா

திருடிவிட்டேன்…மன்னித்து விடுங்கள்! : வீட்டு உரிமையாளருக்கு திருடன் கடிதம்

ஈப்போ,ஆகஸ்ட்.2- ஜாலான் துன் அப்துல் ரசாக் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீடு புகுந்து திருடிய திருடன் “என்னை மன்னித்து விடுங்கள்” என்று எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றிருக்கிறான்.

அந்த 29 வயது திருடன் நேற்று விடியற்காலை 4.45 மணியளவில் அந்த வீட்டுக்குள் புகுந்திருக்கிறான். அச்சமயத்தில் வரவேற்பறையில் உறங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் மீது தவறுதலாக திருடனின் கால் பட அந்த உரிமையாளர் விழித்துக் கொண்டார். அந்த வீட்டு உரிமையாளர் ஓர் ஆசிரியை ஆவார்.

தனது கால் பட்டதும் விழித்துக் கொண்ட அந்த ஆசிரியையின் வாயில் துணியைத் திணித்தது மட்டுமின்றி அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவன் மிரட்டியிருக்கிறான். ஆசிரியை எதிர்த்து போராடவும் அவரது தலையை ஓங்கி மிதித்திருக்கிறான். அதனால், ஆசிரியை பலமிழந்து மயங்கி விழும் அளவிற்கு ஆளானார்.

ஆசிரியையின் நிலையைக் கண்டு பயந்து போன திருடன் தான் அவரது அண்டை வீட்டுக்காரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது மட்டுமின்றி அவரது பணப் பையையும் திருப்பிக் கொடுத்திருக்கிறான். வீட்டின் ஸ்டோர் அறை ஜன்னல் வழியாக தப்பித்துச் செல்லும் முன் தான் அவரது 1400 ரிங்கிட் பணத்தைத் திருடியதாகவும், அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், அது குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றிருக்கிறான்.

அவன் தப்பித்துச் சென்றதும் வீட்டை துப்புரவு செய்யும்போது வீட்டுக் கதவுக்கு கீழ், அந்த திருடன் “மன்னித்து விடுங்கள்” என எழுதிருந்த குறிப்பு ஒன்று இருந்திருக்கிறது. பின்னர், பணியில் இருந்த தனது கணவருக்கு சம்பவம் குறித்து தெரியப்படுத்தி போலீசில் புகார் செய்யச் சொல்லிருக்கிறார் அந்த ஆசிரியை.

புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட திருடனை போலீசார் நேற்றே கையும் களவுமாகப் பிடித்தனர். அவனிடமிருந்து ஆசிரியை வீட்டில் திருடிய பணத்தையும், கம்பியை வெட்டும் கருவியையும் அவனது கைப்பேசியையும் போலீசார் கைப்பற்றினர்.

5 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த திருடனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker