Latestமலேசியா

பெட்ரோனாஸ் தலைவராக அகமட் நிஸாம் நியமனம்

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.1- பெட்ரோனாஸ் தலைவராக டத்தோ அகமட் நிஸாம் சாலே நியமிக்கப்பட்டார் என பிரதமர் அலுவலகம் அறிவித்தது. அவர் எண்ணெய், எரிவாயுத் துறையில் 37 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆவார்.

கடந்த 1981-ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் நிறுவனத்தில் பணி புரிய தொடங்கிய அகமட் நிஸாம், ஆய்வாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இதற்கு முன்னர் பெட்ரோனாஸ் தலைவராக இருந்த முகமட் சிடிக் ஹசான் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டான்ஸ்ரீ வான் சுல்கிப்லி வான் அரிபின் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை தொடர்ந்து வகிப்பார் என தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker