Latestசினிமா

ஷாருக் கானுக்கு மகளாக இருப்பது கஷ்டம்! – மகள் சுகானா புலம்பல்

மும்பை, ஆக.2- ஷாருக்கான் மகளாக இருப்பது மிகக் கடினமான விஷயம் என அவரது மகள் சுகானா கான் தெரிவித்தார்.

தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்து போலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஷாருக் கானுக்கு மகளாக இருப்பது மிகவும் கடினமானது என்று அவருடைய மகள் சுகானா கான் கூறியிருக்கிறார்.

ஷாருக் கானின் மகள் சுகானா கான் பிக்கினியில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.. 18 வயதாகும் சுகானா கான் தற்போது லண்டனில் படித்து வருகிறார்.

‘வோக்’ இதழுக்காக தன்னுடைய முதல் போட்டோ ஷூட்டில் சமீபத்தில் கலந்து கொண்டார். சுகானா கான் அனுபவம் வாய்ந்த மாடலைப் போல் அவர் நடந்துக் கொண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.

அதற்குப் பின் பேட்டியளித்த சுகானா, அந்த போட்டோ ஷூட் மிகவும் பிடித்திருந்ததாக கூறினார். நிறைய எதிர்பார்ப்போடு வந்திருந்தேன். அவை அனைத்தையும் எளிதில் செய்து முடித்த ஓர் உணர்வு ஏற்படுகிறது எனத் தெரிவித்தார்.

தனக்கு நடனமாடுவது மிகப் பிடிக்கும். அதை உணர்ந்து பெற்றோர்கள் அந்த நடனத் திறனை வெளிக்கொண்டு வந்தபோது சிறப்பாக உணர்ந்ததாக தெரிவித்தார். நடனமாடுவது போல போட்டோ ஷூட் செய்தது மிகவும் பிடித்திருந்ததாக சுகானா கூறினார்.

16 வயதிலேயே வீட்டை விட்டுப் பிரிந்து வெளியில் சென்றது மிகப் பெரிய விஷயம் எனக் கூறும் சுகானா, அதனால் பல வித்தியாசமான அனுபவங்களை பெற முடிந்தது என நம்பிக்கையோடு தெரிவித்தார்.

மும்பையில் என்னால் சாதாரணமாக வெளியில் சுற்ற முடியாது. ஷாருக்கான் மகளாக இருப்பது மிகக் கஷ்டம். ஆனால், வெளிநாடுகளில் அப்படி இல்லை எனக் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker