Latestஉலகம்

இரு கர்ப்பப் பைகள் இரு குழந்தைகள்! மருத்துவர்கள் வியப்பு

லண்டன்,ஆக. 3- பிரிட்டனைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், இரட்டை கர்ப்பப் பையில் இரண்டு குழந்தைகளைக் கர்ப்பம் தரித்து குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது, சுமார் 50 கோடி பெண்களில் ஒருவருக்குத் தான் இது போல இயல்பாகக் குழந்தை பிறப்பது நிகழும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் கார்ன்வால் நகரில் வசித்துவரும் அண்ட்ரு தீயணைப்பு வீரராவார். இவரது மனைவி ஜெனிப்பர் தான் கர்ப்பமாக இருந்துள்ளார். ‘ஸ்கேன்’ செய்து பார்த்த போது தான் அவருக்கு இரு கர்ப்பப் பைகள் இருந்ததும் ஒவ்வொன்றிலும் ஒரு குழந்தை இருந்ததும் தெரிய வந்தது.

சரியாக கருத்தரித்த 34ஆவது வாரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சையின் மூலமாக இரு குழந்தைகளையும் வெளியே எடுத்தார்கள். குழந்தை ஒன்று ஆண். மற்றொன்று பெண். பெண்களின் குழந்தை இல்லாமல் போகும் காரணங்களில் மிக முக்கிய இருப்பது இரண்டு கர்ப்பப் பைகள் இருக்கும் விஷயமாகும்.

தாயின் வயிற்றில் இருக்கும் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் முதலில் இரண்டு கர்ப்பப்பைகள் உருவாகி பின்னர் தான் ஒரே கர்ப்பப்பையாக மாறும். சிலருக்கு மாறாமல் அப்படியே இரண்டாகவே இருந்துவிடும்.

குழந்தையாகப் பிறக்கும் போதே அவர்கள் இரு கர்ப்பப் பைகளுடன் பிறப்பார்கள். அவர்களில் நூற்றுக்கு ஐம்பது பெண்களுக்குத் தான் இயற்கையாகக் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

இரண்டு கர்ப்பப் பைகள் உடைய பெண்களுக்கு கருதரிப்பதே சிரமம் அப்படியிருக்கையில் ஜெனிப்பர் குழந்தை பெற்றெடுத்தது ஒரு அரிய நிகழ்வு தான் என மருத்துவர் கூறினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker