Latestமலேசியா

எங்களைத் தூற்றும் உத்துசானை நாங்கள் ஏன் வாங்க வேண்டும்?- துன் மகாதீர்

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.3- கல்வி அமைச்சு ‘உத்துசான்’ பத்திரிகையை வாங்குவதைத்தான் நிறுத்தியதே தவிர அந்த அமைச்சின் பணியாளர்கள் யாரும் அந்தப் பத்திரிக்கையைப் படிக்கக் கூடாது என்று தடைப் போடவில்லை என பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

“பக்காத்தான் ஹரப்பான் அரசை எப்போதும் வஞ்சிக்கும் விதமாக செய்திகளை வெளியிடும் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் பத்திரிக்கையை நாங்கள் ஏன் வாங்க வேண்டும்?

கல்வி அமைச்சு அந்த பத்திரிக்கையை வாங்காது என்றுதானே சொன்னோம். அந்த பத்திரிக்கையைக் கிழித்தோமா? எரித்தோமா?” என்றார் அவர்.

உத்துசானை இனிமேல் வாங்கக் கூடாது என்று கல்வி அமைச்சு அதன் அதிகாரத்திகுட்பட்ட பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்வி நிலையங்களுக்கு உத்தரவிட்டிருந்தது தொடர்பில் பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker