Latestமலேசியா

துஷ்பிரயோகம்; பயிற்சி டாக்டர்கள் புகார் செய்ய சரியான ‘தளம்’ எங்கே?

கோலாலம்பூர், ஆக.3- மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களிடம் சீனியர் மருத்துவர்கள் முறை தவறி நடந்துக் கொள்கிறார்கள் என்பது தொடர்பில், அந்தப் பயிற்சி மருத்துவர்கள் புகார்களைs சமர்ப்பிக்க ஏதுவான ‘தளம்’ அமைக்கப் பட வேண்டும் என்று ஷா ஆலாமைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார்.

தங்களின் பயிற்சி காலத்தில், அந்தப் பயிற்சி மருத்துவர்கள் எவ்வாறான சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்பது தொடர்பில் அவர்கள் கருத்துரைக்க ஏற்ற தளம் அல்லது அணுகுமுறை எங்கும் இல்லை என்று அந்த மருத்துவ அதிகாரி கூறினார்.

பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி காலத்தை நீடிக்க சீனியர் மருத்துவர்களுக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. அதனை கையில் எடுத்துக் கொண்டு, பல சீனியர் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களை கொடுமைப் படுத்துகின்றனர் என்று அவர் கருத்துரைத்தார்.

“ஒரு பயிற்சி மருத்துவர், மருத்துவராக தகுதி கொண்டுள்ளாரா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம், சீனியர் அல்லது மருத்துவ நிபுணர்களிடம் வழங்கப் பட்டுள்ளது.

“இந்த சீனியர் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களை வேண்டுமென்றே தவறான வகையில் பரிசீலனை செய்கிறார்கள் எனும் பட்சத்தில், அது குறித்து அப்பயிற்சி மருத்துவர்கள் மலேசிய மருத்துவ மன்றம் அல்லது சுகாதார அமைச்சிடம் புகார் செய்யலாம்” என்றார் அவர்.

ஒவ்வொரு மருத்துவ இலாகாக்களும் வெவ்வேறு விதமான மதிப்பீடு செயல்முறையை கையாளுகின்றன என்று பெயர் குறிப்பிட விரும்பாத பயிற்சி மருத்துவர் ஒருவர் கூறினார்.

மதிப்பீடு செய்பவர் என்ன நினைக்கிறாரோ, அதற்கு தகுந்தார்போல் தான் மதிப்பீடுகள் வழங்கப் படுகின்றன. இதனால், சிலர் தங்களின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தக் கூடும் என்று அவர் கருத்துரைத்தார்.

“இது குறித்து புகார் செய்யும் வகையில், எங்களுக்குத் தகுந்த தளங்கள் அமைக்கப் படவில்லை” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker