Latestமலேசியா

நாய்க்கு உணவில் 32 ஊசிகளைக் கலந்து கொடுத்த பெண்

கோத்தா கினாபாலு,ஆகஸ்ட்.3- தனது வளர்ப்பு பிராணியான நாய்க்கு ரொட்டியில் 32 ஊசிகளைக் கலந்து கொடுத்த சாகடிக்க முயற்சித்த ஒரு மாதுவுக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையையும் 7000 ரிங்கிட் அபராதத்தையும் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.

53 வயதான லத்திப்பா@ஹில்டா டுசின் என்ற அம்மாது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிபதி அய்னுல் ஷாரின் முகமட் அத்தீர்ப்பை வழங்கினார்.

கடந்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி, தனது வீட்டில் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8.30 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் லத்திப்பா இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது இரு பிள்ளைகளை அந்த நாய் கடித்து காயம் ஏற்படுத்திவிட்டதால், அந்நாயை பழிவாங்கும் எண்ணத்தில் அதன் சாப்பாட்டில் ஊசிகளைக் கலந்ததாக லத்திப்பா தனது மூத்த மகளிடம் உண்மையைக் கூறியிருக்கிறார்.

எனினும், தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும், தனக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டாம் என அவர் நீதிபதியிடம் கேட்டார். தன்னை நம்பிதான் அவரது குடும்பம் இருப்பதாக அவர் காரணம் சொன்னார்.

பாதிக்கப்பட்ட நாய், விலங்கு வதை தடுப்பு அமைப்பின் பராமரிப்பில் விடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker