Latestமலேசியா

மகாதீர் -அஸ்மினை சாடும் அந்தக் குரல் பதிவு! என் குரல் அல்ல! -அன்வார் மறுப்பு!

கிள்ளான், ஆக.3- பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மற்றும் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்miன் அலி ஆகியோரைக் கடுமையாக சாடும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமிம் குரல் பதிவு (ஆடியோ) ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ல நிலையில் அது என் குரல் அல்ல என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அந்த ஆடியோவில் உள்ள குரல் பிகேஆர் ஆலோசகர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சொந்தமானது. அவர் தான் ஆத்திரத்தில் மகாதீரையும், அஸ்னினையும் திட்டுகிறார்ர் என்று சில தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்த ஆடியோவில் உள்ள குரல் தன் குரலல்ல. தாம் கோபத்தின் உச்சத்தில் இருந்தால் கூட, அந்த ஆடியோவில் பயன்படுத்தப் பட்ட தவறாக சொற்களை தாம் பயன்படுத்தியது இல்லை என்று அன்வார் தெரிவித்தார்.

அந்த ஆடியோ பரவலின் பின்னணியில் தேசிய முன்னணி ஈடுபட்டிருக்கலாம் என்பது குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அந்த ஆடியோவை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“கட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் காலக்கட்டத்தில் இவ்வாறான ஆடியோக்கள் பரவலாகுவது நல்லதல்ல. அதன் பின்னணியில் யார் செயல் பட்டிருந்தாலும், என்னுடன் நேரிடையாக மோதுங்கள். இப்படி பொய்யான செயல் செய்து மோதாதீர்” என்று அவர் அறிவுறுத்தினார்.

“கஸானா நியமனத்திற்கு பின்னர், நான் சுங்கை கண்டீஸில் மட்டும் தான் உரையாற்றினேன். அதற்கு முன்னர், நான் துர்க்கியில் இருந்தேன்” என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கலைப்பதற்காக அந்த ஆடியோ வெளியிடப் பட்டிருக்குமா என்ற கேள்விக்கு, “வெறும் ஆடியோவால், எங்களின் கூட்டணி உடைப்படாது. அதனை அப்படியே நம்புவதற்கு நாங்கள் பகுத்தறிவு கொண்டிராதவர்கள் அல்ல. “இருந்த போதிலும், அதில் உண்மை உண்டா என்பதை கூற வேண்டியது எங்கள் கடமை” என்று அன்வார் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker