Latestசினிமா

உள்ளதைக் கெடுத்த ரசிகர்கள்: நடிகையின் திருமணம் ரத்து!

பெங்களூரு, ஆக.5- பிரபல கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ரஷ்மிகாவும் கன்னட நடிகர் ரஷித் ஷெட்டியும் “கிரிக் பார்ட்டி” என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

முறைப்படி தங்களுடைய காதலை வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி தற்போது இவர்களுடைய காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது என்று தகவலும் வெளியானது.

இந்நிலையில் “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவாரகொண்டாவுடன் ரஷ்மிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது.

அதில் காதல் காட்சியில் ரஷ்மிகா நெருக்கமாக நடித்திருந்தார். இதனால் ரசிகர்கள் சிலர் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இப்படியெல்லாம் நடிக்கலாமா? என இவரை சமூக வலைத்தளத்தில் மோசமாக விமர்ச்சித்து உள்ளனர்.

இதனால் ரஷித் ஷெட்டியின் பெற்றோர் மிகவும் கோபமடைந்தனர். இதைத் தொடர்ந்து இவர்களுடைய திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker