Latestமலேசியா

சீனியர் டாக்டரின் பாலியல் தொல்லை: மூடிமறைப்பா? -ஹன்னா இயோ

கோலாலம்பூர், ஆக.5- கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனை ஒன்றில் துறைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் சீனியர் டாக்டர் ஒருவர் சம்பந்தப்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்த விவகாரம், மூடி மறைக்கப்படும் சாத்தியங்கள் இருப்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட டாக்டருக்கு எதிராக புகார்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால் விவகாரத்தை மூடி மறைக்க முயலும் சாத்தியங்கள் இருக்கலாம் என்றார் அவர்.

இத்தகைய பாலியல் தொல்லைகள் குறித்து நடவடிக்கை எடுக்க குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் குறித்து மூடி மறைக்கப்படுகிறதா? என்பதன் மீது விசாரணை தேவைப்படுகிறது என்றார் அவர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டதாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். இது குறித்து நாங்கள் விசாரிப்போம் என்றார் ஹன்னா இயோ.

இது தொடர்பாக விசாரிக்க, சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள சுயேட்சை விசாரணை குழு நடத்தும் விசாரணையில் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சைச் சேர்ந்த இரு பிரதிநிதிகள் கலந்து கொண்டு கண்காணிப்பார்கள் என்று அவர் விளக்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker