Latestஉலகம்

ஒசாமா லாடனின் மகனுக்கு திருமணம்: மணப்பெண் யார்?

காபுல், ஆகஸ்டு. 5- அல்கய்டா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் அல்கய்டா தலைவர் ஒசாமா பின் லாடனின் மகனுக்கு திருமணம்!

காபுல், ஆகஸ்டு. 5- அல்கய்டா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லாடனின் மகன் ஹம்சா பின் லாடன், மற்றொரு பயங்கரவாதியின் மகளைத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

29 வயதாகும் ஹம்சா பின் லாடன் அமெரிக்காவின் இரட்டையர் கோபுர தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் முகம்மது அட்டாவின் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். இச்சடங்கானது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹம்சா மா திருமணம் செய்துள்ள மணப்பெண்ணின் பெயர் மற்றும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் அவர் எகிப்திய நாட்டவர் என்றும் 20 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க படையினரால் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டதன் பின் அல்கய்டா பயங்காரவாத அமைப்புக்கு அய்மான் அல் ஷாவாகீரி என்பவர் தலைவராக இருந்து வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஹம்சா பின் லாடன் பொறுப்பு வகிப்பதாக கூறப்படுகிறது. இரட்டை கோபுர தாக்குதலின் போது அட்டா, விமானம் ஒன்றை கடத்திச் சென்று அனைத்துலக வர்த்தக மையத்தின் வடகோபுரத்தில் தாக்குதல் நடத்தியவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அல் கய்டா ஆதரவாளர்கள் தனைவரும் வாஷிங்டன், லண்டன், பாரிஸ் மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து
தாக்குதலுக்கு தயாராகுங்கள் என ஹம்சா வெளிப்படையாக கோரிக்கை முன் வைத்தார். இதனையடுத்து ஹம்சா பின் லாடனை அனைத்துலக
பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker