Latestமலேசியா

கைப்பேசி வெடித்து நஸ்ரின் மரணமா? இல்லை, கொலை என்கிறது போலீஸ்!

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.6- ‘கிரேடல் பண்ட்’ சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியான நஸ்ரின் ஹாசானின் மரணம் ஒரு கொலையென போலீசார் கண்டறிந்ததை தொடர்ந்து அது குறித்த புலன் விசாரணை இப்போது தீவிரம் அடைந்துள்ளது.

நஸ்ரின் அறையில் அவரது கைத்தொலைப்பேசி வெடித்து தீப்பிடித்ததால் அவர் தீயில் கருகி இறந்தார் என கருதப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடந்தது. பிரபல வர்த்தகராக விளங்கிய நஸ்ரினின் மரணம் வர்த்தக வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே, அவருடைய அறையில் நான்கு இடங்களில் பெட்ரோல் கறைகள் இருந்தது சோதனைக்கூட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பிரிவு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையில் குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலை குற்ற விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

அவரது தலை, கட்டில் மற்றும் மெத்தை ஆகியவற்றுடன் அவரது கைத்தொலைப்பேசியிலும் பெட்ரோல் கறைகள் இருந்தது சோதனைக்கூட ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker