Latestசினிமா

படத்தில் நாயகனாகிறார் இயக்குனர் கவுதம் மேனன்

சென்னை, ஆக.6- இயக்குனர் கவுதம் மேனன் தனது படங்களில் பாடல் காட்சிகளில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டுவார். பின் ஒரு கட்சியில் மட்டும் நடித்தார். அதன் பின் இயக்குனராகவே சில படங்களில் நடித்தார். கடைசியாக “கோலி சோடா 2” ஆம் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

இப்படி படிப்படியாக நடிகரான இயக்குனர் கவுதம் மேனன் இப்போது நாயகனாக நடிக்க இருக்கிறார். ஜெய் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் படத்தில் கவுதம் மேனன் தான் ஹீரோ. இதற்காக ஜெய், கவுதம் மேனனிடம் கதை சொல்லி அனுமதி வாங்கிவிட்டார்.

தயாரிப்பாளரும்  தயாராக இருக்கிறார்.  ஆகஸ்டு 15 முதல் படப்படிப்பு தொடங்குகிறது. இதில் இன்னொரு முக்கிய பாத்திரத்தில்  ‘நாச்சியார்’ படத்தில் ஜிவி பிரகாஷுக்கு  ஜோடியாக நடித்த இவானா நடிக்கிறார்.

ஆனால் கவுதமிற்கு ஜோடியாக நடிக்கவில்லை. இவானாவிற்கு வரும் ஒரு பிரச்சனையிலிருந்து அவரை காப்பாற்றும் ‘காட் பாதர்’ பாத்திரத்தில் கவுதம்
பாத்திரமேற்று நடிக்கிறார். இன்னும் சில நாளில் முறையான அறிவிப்பு வெளிவரவிருக்கிறது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker