Latestமலேசியா

HSR ரயில்; சிங்கையுடன் விரைவில் பேச்சுவார்த்தை–அஸ்மின்

கோலாலம்பூர், ஆக.6- தாம் அண்மையில் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருந்த போது HSR திட்டம் குறித்து சிங்கப்பூர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

சிங்கப்பூர் தலைவர்களுடனான அக்கலந்துரையாடல் சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து, HSR எனப்படும் அதிவேக இரயில் சேவை திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை என்று எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் கூடிய விரைவில் அறிக்கை வெளியிடக் கூடும் என்று அஸ்மின் கூறினார்.

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சரான டான்ஶ்ரீ முகைதீன் யாசினை நேரில் கண்டு நலம் விசாரிக்க தாம் சிங்கப்பூர் சென்றதாக அவர் தெரிவித்தார். அந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் தலைவர்களைச் சந்தித்து தாம் HSR அதிவேக ரயில் திட்டம் குறித்து கலந்துரையாடியதாக அவர் விவரித்தார்.

அதிவேக இரயில் சேவை திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த சிறந்த தேதியை சிங்கப்பூர் அறிவிக்க வேண்டும் என்று தாம் கடிதம் வாயிலாக, சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக அஸ்மின் நாடாளுமன்றத்தில் கூறினார்.

கடந்த ஜூலை. 23-ஆம் தேதியன்று, அஸ்மின் அலியிடமிருந்து தங்களுக்கு கடிதம் அனுப்பப் பட்டதாக, அண்மையில் சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker