Latestமலேசியா

அதிவேக ரயில்: அஸ்மினுக்கு சிங்கை மறுப்பு!

கோலாலம்பூர், ஆக.7- சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டிருந்த மலேசிய பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியுடனான கலந்துரையாடலின் போது சிங்கப்பூர் தலைவர்கள் ஹெச்.எஸ்.ஆர் திட்டம் குறித்து விவாதிக்கவில்லை என்று சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில் அஸ்மின் அலியுடன் சிங்கப்பூர் தலைவர்கள் யாரும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அது தொடர்பிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை என்று நடைபெறவிருக்கிறது என்பது குறித்து அஸ்மின் அலி இதுவரை தங்களுக்கு எந்த விவரமும் தெரிவிக்கவில்லை என்று சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

“ஆகஸ்டு மாதம் 6-ஆம் தேதி வரை, அவ்விவகாரம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தேதியும் எங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை. சிங்கப்பூரின் கேள்விகளுக்கும், மலேசிய அரசாங்கம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ பதில்களையும் வெளியிடவில்லை” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ள உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முகைதீன் யாசினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர், தாம் சிங்கப்பூர் தலைவர்கள் சிலரை சந்தித்து, ஹெச்.எஸ்.ஆர் திட்டம் குறித்து பேசியதாக அஸ்மின் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

“சிங்கப்பூர் தலைவர்களுக்கும் எனக்கும் இடையிலான அந்தச் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அதிவேக இரயில் சேவை திட்டம் குறித்து கூடிய விரைவில், மலேசிய மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தவிருக்கின்றன” என்று அஸ்மின் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker