Latestமலேசியா

சிங்கை மருத்துவமனை: மொகிடின் வீடு திரும்ப அனுமதி

சிங்கப்பூர்,ஆகஸ்ட்.7- மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குணமாகும் வரையில் மொகிடின் குடும்பத்தாருடன் ஓய்வில் இருப்பார் என அவரது பத்திரிக்கைச் செயலாளர் ஹபிஸ் அப்துல் ஹலிம் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

கணையத்தில் வளர்ந்திருந்த கட்டியை அகற்றுவதற்காக அவர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். அதனால், ஜூலை 12-ஆம் தேதியில் இருந்து அவர் விடுப்புக்குச் சென்றிருந்தார். இன்னும் ஒரு மாதத்தில் அவர் மீண்டும் தமது பணியைத் தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொகிடின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்தபோது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லூங், துணைப்பிரதமர் தியோ சீ ஹியேன், முன்னாள் பிரதமர் கோ சோக் தோங் ஆகியோர் அவரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.

மொடினின் உள்துறை அமைச்சு பணிகளை தற்போதைக்கு பிரதமர் துன் மகாதீர் பார்த்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker