Latestசினிமா

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நடிகை ஆகிறார்

மும்பை, ஆகஸ்டு. 7- இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை திரைப்படமாக்கப் படவிருக்கிறது. அதேவேளையில் அந்தப் படத்தில் சானியா மிர்சாவையே அவருடைய பாத்திரத்தில் நடிக்க வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

சினிமா பிரபலங்கள்,அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை சினிமா ஆக்குவதில் இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகம் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அப்படி வெளியான சில சுயசரிதை படங்கள் வசூலை குவித்துள்ளதால் இந்தப் போக்கு இபோது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் ‘சச்சின்’, ‘தோனி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றன. அதையும் தாண்டி ‘டங்கல்’ போன்ற படங்கள்நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கை, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கைக் கதையும் படமாக்கப்பட்டன.

இதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.
இதே போல மகளிர் கிரிக்கெட் வீராங்களை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் டாப்ஸி நடிப்பார் என்று தெரிகிறது

மேலும் பி.வி சிந்துவின் வாழ்க்கை கதையும் சினிமாவாக எடுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதை பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். பி.வி சிந்துவாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

அந்த வரிசையில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறு சினிமாகிறது. பல்வேறு சினிமா நிறுவனங்கள் அவர் கதையை படமாக்க அனுமதி கேட்டு காத்திருந்த நிலையில் ரோனி ஸ்குருவாலாவின் நிறுவனத்துக்கு சானியா மிர்ஸா ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சானியாவையே நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker