Latestஇந்தியாஉலகம்

தள்ளாத வயதில் தேர்வெழுதி அசத்தினார் மூதாட்டி!

ஆலப்புழா: படிக்க வசதியிருந்தும், நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தும் கல்வி கற்காமல் இருக்கும் பல பேருக்கு இடையே வயது 96 ஆகியும், உடல் தளர்ந்தும்கூட, மனம் தளராமல் நான்காம் வகுப்பு தேர்வு எழுதி அசத்தியுள்ளார் கார்த்தியாயினி அம்மாள் என்ற ஒரு மூதாட்டி.

கேரளாவில் தற்போது கல்வி கற்க வயது தடையாக இல்லை என்பதும், எத்தனை வயது முதிர்ந்திருந்தாலும் அவர்கள் 4-ஆம், 7-ஆம்,10-ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்ற நிலை உள்ளது மட்டுமல்ல, குறைந்தபட்சம் 4-ஆம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே பல்வேறு அரசு சலுகைகளைப் பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளதால், பல வயது முதிர்ந்த பெரியவர்களும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ஆலப்புழாவை மாவட்டைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாள், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வெழுதினார். வாசிப்புக்கான தேர்வில் அவர் முழு மதிப்பெண்களைப் பெற்றார். மலையாள மொழி, கணிதம் ஆகியவற்றின் மதிப்பெண்கள் இன்னும் தெரியவில்லை.

ஆனால், தேர்வெழுதி விட்டு வெளியே வந்த மூதாட்டி தான் படித்த எல்லாவற்றையும் தேர்வில் கேட்கவில்லை; வினாத் தாட்களில் கேட்கப்பட்டவையைக் காட்டிலும் தான் அதிகமாகப் படித்து விட்டதாகக் கூறியுள்ளார். அதனால், நிச்சயம் சிறந்த மதிப்பெண்களை பெறுவார் என அவர் நம்பிக்கையாக இருக்கிறார்.

இதனிடையே, இந்த மூதாட்டி ஆங்கில மொழியையும் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டி நிறைய ஆங்கில நூல்களை வாசிக்கத் தொடங்கியுள்ளாராம்.

படிப்பு என்றாலே வெறுக்கும் இளையோருக்கு கார்த்தியாயினி அம்மாள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker