Latestமலேசியா

தேர்தல் விதிகளை மீறுவதா? நஜிப் மீது பெர்சே புகார்!

கோலாலம்பூர், ஆக.7- சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று, தேசிய முன்னணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பெர்சே 2.0 அமைப்பு புகார் செய்தது.

நஜிப்பிற்கு எதிரான புகாரை தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்ப்பித்த பெர்சே 2.0 அமைப்பின் இடைக்கால தலைவரான ஷாரூல் அமான் முகமட் சாரி, அது குறித்து தாம் போலீஸ் புகாரும் செய்யவிருப்பதாக தெரிவித்தார்.

அவ்விவகாரம் தொடர்பில், பெர்சே அமைப்பு நேரிடையாக போலீசிடம் புகார் செய்வது நல்லது என்று வழக்கறிஞர் முகமட் ரஃபீக் ரஷீட் அலி கருத்துரைத்தார். போலீஸ் புகார் செய்தால், அது தொடர்பில் விசாரணை நடைபெறும் என்ற அடிப்படையில் தாம் அவ்வாறு கருதுவதாக அவர் விவரித்தார்.

“தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் கீழ், தேர்தல் தினத்தன்று பிரச்சாரம் செய்வது தவறாகும். அத்தவறை செய்யும் ஒருவர் குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டால், போலீசார் சம்பந்தப்பட்டவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தலாம்” என்று அவர் விவரித்தார்.

அவ்விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை மெத்தனமாக நடந்துக் கொள்ளக் கூடாது. தேர்தல் நாளன்று பிரச்சாரம் செய்யப் பட்டதை தேர்தல் ஆணையம் கண்டிக்க தவறினால், மற்ற தலைவர்களும் அதனை பின்பற்றக் கூடும் என்று அவர் எச்சரித்தார்.

தேர்தல் நாளன்று பிரச்சாரம் செய்து, தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் 26(1)(ஏ) மற்றும் (எப்ஃ) ஆகிய பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நஜிப் மீறியுள்ளார் என்று பெர்சே அமைப்பு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker