Latestஉலகம்

பெப்சிகோவின் நிர்வாகப் பதவி: விலகினார் இந்திரா நூயி!

வாஷிங்டன், ஆகஸ்டு. 7- உலகின் மாபெரும் சுவைபான நிறுவமான பெப்சி கோவின் தலைமை நிர்வாகச் செயல்நிலை அதிகாரியாக கடந்த 12 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த இந்தியரான இந்திரா நூயி, தற்போது அதிலிருந்து பதவி விலகியுள்ளார்.

பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக உள்ள ரோமோன் லாகுரடாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நிறுவன வாரிய உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர். இப்புதிய பொறுப்பை அவர் 2018 அக்டோபர் 3 முதல்
ஏற்பார்.

பெப்சிகோ நிறுவனத்தில் 24 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் இந்திரா நூயி அடுத்து சில காலம் அந்நிறுவனத்திலேயெ இருந்து வருவார் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு வரை பெப்சிகோவின் தலைவராக இவர் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தம்முடைய வாழ்க்கை சிறப்புற காரணமாக இருந்த எனது பெற்றோர்களின் வளர்ப்பு முறையே என்று அவர் அடிக்கடி குறிப்பிட்டு வந்தார்.

” சென்னையில் வளர்ந்த எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. மக்களின் வாழ்வில் மிகவும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளேன்’ என்றார் அவர்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகச் செயல்நிலை அதிகாரியாக இந்திரா நூயி பொறுப்பேற்ற காலக்கட்டத்தில், அமெரிக்காவின் 500க்கும் மேற்பட்ட அனைத்துலகப் பெரு நிறுவனங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களே உயர் நிர்வாகிகளாக இருந்தனர்.

அதன் பின்னர் இந்திரா நூயி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக மாறினார். அவரைப் பின்பற்றி பல பெருநிறுவனங்களில் பெண்கள் உயர்பதவிகளுக்கு முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker