Latestமலேசியா

சித்ரவதைக்கு உள்ளான மூதாட்டி மீட்பு

புக்கிட் மெர்த்தாஜாம்,ஆகஸ்ட்.8- செபெராங் ஜெயா, தாமான் சியாக்காப்பில் நீண்ட காலமாக தமது உறவுக்காரர்களால் கொடுமைப் படுத்தப்பட்டுவந்த மூதாட்டி ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பார்வைக் குன்றிய அந்த 79 வயது மூதாட்டியை அவரது உறவினர்கள் துடைப்பம், காலணி, பாத்திரங்கள் ஆகியவற்றால் அடித்து சித்ரவதைச் செய்து வந்துள்ளனர். யாரும் வீட்டில் இல்லாதபோது அவரை வீட்டின் பின்புறம் தனியாக விட்டுச் சென்றுவிடுவார்களாம்.

இதை வெகு காலமாக கவனித்துவந்த அண்டை வீட்டார் மலேசிய தமிழர் குரல் என்ற அரசு சாரா அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். அப்புகாரை அடுத்து, தமிழர் குரல் அமைப்பினர் நேற்று மாலை சம்பந்தபட்ட வீட்டிற்குச் சென்று பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியைக் காப்பாற்றிக் கொண்டு வந்தனர்.

Pity grandma! We will save her soon!

Posted by David Marshel on Tuesday, 7 August 2018

தமிழர் குரல் அமைப்பினர் அந்த வீட்டுக்குச் சென்ற சமயத்தில் மூதாட்டி வீட்டின் பின்புறம் மழையில் நனைந்து காணப்பட்டதாக செபெராங் பிறை தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ரோஸ் அஸான் நிக் தெரிவித்தார்.

தனக்கு வேறும் யாரும் இல்லாததால் சம்பந்தப்பட்ட வீட்டில் மூன்றாண்டுகளுக்கும் மேல் அந்த மூதாட்டி தங்கி வந்துள்ளார். வீட்டில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருமே தன்னை அடித்து துன்புறுத்தியுள்ளதாக மூதாட்டி கூறினார். அவர் சிகிச்சைக்காக புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதையடுத்து, 56 வயது ஆடவரையும், 54 வயது மாதுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Patti statement about what happened!

Posted by Malaysian Tamilar Kural on Tuesday, 7 August 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker