Latestமலேசியா

பொய்ச் செய்தி தடுப்புச் சட்டத்தை அகற்றும் மசோதா மக்களவையில் தாக்கல்

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.7- இவ்வாண்டு இயற்றப்பட்ட பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தை நீக்குவதற்கான சட்ட மசோதா முதலாம் கட்டமாக இன்று மக்களவையில் வாசிக்கப்பட்டுள்ளது.

அந்த சட்ட மசோதாவை பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூவ் கியோங் வாசித்தார்.

தற்போது நடப்பில் உள்ள பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தின் கீழ் இதுவரையில் விசாரிக்கப்பட்டு வருகின்ற எந்த வழக்குகளுக்கும் இந்த சட்ட மசோதா இடையூறாக இருக்காதென கூறப்பட்டது. இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படும் வரையில் அந்த வழக்குகளைத் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

14-ஆவது பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போது அதாவது ஏப்ரல் 11-ஆம் தேதி பொய்ச் செய்தி தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker