Latestஇந்தியா

கருணாநிதி பின்னர் ஸ்டாலின் பதித்த முதல் அரசியல் வெற்றி முத்திரை!:

சென்னை, ஆகஸ்ட்.9- கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் திமுகவை எப்படி ஸ்டாலின் வழிநடத்தப் போகிறார் என்று வெகுகாலமாக ஐயப்பாட்டுடன் இருந்து திமுகவினருக்கும் பிற கட்சிக்காரர்களுக்கும் தான் ஒரு பாயும் புலி என்பதை கடந்த இரு தினங்களில் நிருபித்து இருக்கிறார்.

கலைஞரின் இறுதி பயண ஏற்பாடுகளை சரிவரத் திட்டமிட்டு நிறைவேற்றி இருப்பதோடு, தக்க சமயத்தில் சட்ட வழக்கின் மூலம் கலைஞரை மரீனாவில் அடக்கம் செய்ய இடம் பெறுவதிலும் தனது வெற்றி முத்திரையை அவர் பதித்திருக்கிறார்.

கருணாநிதி, கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்திய காலங்களில், அவரது முழுமையான ஆலோசனை மற்றும் அறிவுரைப்படி மட்டுமே ஸ்டாலின் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் கருணாநிதி மறைந்த பின் செயல்முறை தலைவர் ஸ்டாலினின் முடிவுகள் எப்படி இருக்கும்? அரசியல் மற்றும் சட்ட ரீதியான பிரச்சனைகளை எப்படி கையாள போகிறார்? என்ற கேள்வி, திமுகவினர் மத்தியிலும் மற்ற கட்சியினர் மத்தியிலும் நிலவி வந்ந்தது.

இதற்கு சவலாக, அண்ணாதுரை நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, அரசு அனுமதி மறுத்தது. ஆனால் அதனை எதிர்த்து உடனுக்குடன் முடிவெடுத்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி கண்டார் ஸ்டாலின்.

இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என திமுகவினர் தெரிவித்துள்ளனர். எனவே, எதிர்காலத்திலும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என துக்கத்திலும் தொண்டர்கள் நம்பிக்கையும் பாராட்டும் தெரிவித்தனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker