Latestமலேசியா

கை, கால் வாய்ப்புண் கிருமிகளைத் தடுக்க ‘ஸ்பிரேயா?’ -அமைச்சு மறுப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட். 9, கை, கால், வாய்ப்புண் தொடர்பான நோயைத் தடுக்க, ‘ஸ்பிரே’ விற்பனையில் இருப்பதாக கூறப்பட்ட போதிலும் அத்தகைய ‘ஸ்பிரே’யினால், கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்று சுகாதாரத் துறை தலைமை இயக்குனர், டத்தோ டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

‘தைமோஸ்’ என்றழைக்கப்படும் அந்த ‘ஸ்பரே’ விற்பனையில் உள்ளது. அதை, துணி மணிகள், விளையாட்டு சாதனங்கள், போன்றவற்றின் மீது ‘ஸ்பிரே’ செய்தால், கிருமிகள் பரவாமல் தடுக்க முடியும் என்று கூறப்படுவது குறித்து கருத்துரைத்த போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த ‘ஸ்பிரே’, கிட்டத்திட்ட 99.99 விழுக்காடு தொற்றுக் கிருமிகளை உடனடியாக கொன்றுவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், இத்தகைய கூற்று அடிப்படையற்றது. இதனால் கைகால் வாய்ப்புண் நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பதற்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என்றார் டத்தோ டாக்டர் நோர் ஹிசாம்.

இந்த வகை ‘ஸ்பிரே’, நேரடியாக மனிதர்களின் மீது பயன்படுத்துவதில்லை என்பதால், அமைச்சின் நேரடிக் கவனத்திற்கு வருவதில்லை. அமைச்சின் கீழ் இத்தகைய பொருள்களை பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை, எனவே, மக்கள் எளிதில் மருத்துவம் சார்ந்த கூற்றுகளை நம்பி விட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker