Latestஉலகம்

சாலை நெரிசல்: பில்லியன் கணக்கில் வருவாய் இழக்கிறது சுவிட்சர்லாந்து!

பெர்ன், ஆகஸ்ட். 9- கட்டுப்பாடற்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக சுவிட்சர்லாந்தின் ஆண்டு தோறும் சுமார் 1.9 பில்லியன் பிராங்க் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான வருவாய் இழப்புகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, போக்குவரத்து நெரிசல் தொடர்பான வருவாய் இழப்பு என்பது சுமார் 1.9 பில்லியன் பிராங்க் எனத் தெரிய வந்துள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டை விட ஒப்பிடுகையில் 7 விழுக்காடு அதிகம் எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக நேர விரயமும் 14% அதிகரித்துள்ளது. மட்டுமின்றி காலநிலை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 12% அதிகரித்துள்ளது.

ஆனால் இதே காலகட்டத்தில் எரிபொருளுக்காக செலவிடும் தொகையானது சுமார் 6% சரிவை கண்டுள்ளது. மட்டுமின்றி விபத்து தொடர்பான வருவாய் இழப்புகளும் சுமார் 8 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது.

நாட்டின் உள்கட்டுமானத்தில் உரிய கவனம் செலுத்தினால் இது போன்ற வருவாய் இழப்புகளை தவிற்க முடியும் என அரசு சுட்டிகாட்டியுள்ளது. மேலும் அலுவலங்களிலும் பள்ளிக்கூடாங்களிலும் பணி நேரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சிறந்த தீர்வை எட்ட முடியும் எனவும் அரசு கருதுகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker