Latestமலேசியா

சிறார் திருமணத்தை தடை செய்ய அரசு தீவிர முயற்சி –அமைச்சர்

கோத்தா கினாபாலு, ஆக.9- மலேசியாவின் சிறார் திருமணங்களை தடைச் செய்வதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் துறையின் அமைச்சரான டத்தோ லீவ் வுய் கியோங் கூறினார்.

அதன் தொடர்பில் தாம் மகளிர், குடும்பம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரான டத்தோஶ்ரீ வான் அஸீஸா வான் இஸ்மாயிலுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நட்த்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

அவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப் பட்டுள்ள தரப்பினர்கள், மற்றும் சமய அமைப்புகள் அனைவரின் ஒப்புதலும் கிடைக்கப் பெறும் பட்சத்தில், சிறார் திருமணத்திற்கு உடனடியாக தடை விதிக்கப் படும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

“மலேசியாவில், திருமண வயதை அதிகரிப்பதால், எவ்வித பிரச்சனைகளை அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடும் என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அதே வேளையில், இஸ்லாமிய சட்டங்களை மதிக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு உண்டு.

“சபா மற்றும் சரவாக் மாநிலங்களில், பெற்றோர்களின் அனுமதியோடு சிறார் திருமணங்கள் செய்துக் கொள்ளப் படலாம் என்ற சட்டம் வழக்கத்தில் உள்ளது” என்று லீவ் செய்தியாளர்களிடம் சொன்னார்.

குழந்தைகள் அனைவரும் பாதுகாக்கப் பட வேண்டும். அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அரசாங்கம் என்றும் செயல்படும் என்றார் அவர்.

“சில சட்டங்கள் வழக்கத்தில் உள்ளன என்றதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, சில காமுகன்கள் சிறார் திருமணம் செய்துக் கொள்கின்றனர். இதனை அரசாங்கம் அனுமதிக்காது” என்று அவர் வலியுறுத்தினார்.
சிறார் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற அக்கறை சமய அமைப்புகளுக்கும் உண்டு என்று தாம் நம்புவதாக லீவ் கருத்துரைத்தார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker