Latestமலேசியா

மலாக்கா: ஆகஸ்ட் 20 தொடக்கம் இலவச பேருந்து சேவை

மலாக்கா,ஆகடஸ்ட்.9- 14-ஆவது பொதுத் தேர்தலின்போது மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி அளித்தது போலவே, இம்மாதம் 20-ஆம் தேதி மலாக்கா செண்ட்ரலில் இலவச பேருந்து சேவை தொடங்கப்படவுள்ளது.

மக்களின் குறிப்பாக உட்புறப்பகுதிகளில் வாழ்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசு பேருந்து சேவையை இலவசமாக வழங்குவதற்கான இந்த முயற்சியை முன்னெடுத்ததாக மாநில பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் பொது வசதிக்கான செயற்குழுத் தலைவர் முகமட் சோப்பி அப்துல் வாஹாப் தெரிவித்தார்.

மலாக்கா செண்ட்ரல்- மலாக்கா மருத்துவமனை- மலாக்கா அனைத்துலக வாணிப மையம்- மலாக்கா செண்ட்ரல்வ் மலாக்கா திரான்சிட் சந்தை ஆகிய இடங்களுக்கு இந்த பேருந்து சேவை விடப்படவுள்ளது. அந்த பேருந்து சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி முதல் செயல்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker