Latestமலேசியா

மலேசியர்களின் ஆதரவு: நெகிழ்ச்சி அடைகிறேன்! -AsNTM6 மாடல் அழகி ரூபிணி!

கோலாலம்பூர், ஆக.9- AsNTM6 எனப்படும் இவ்வாண்டிற்கான ஆசியாவின் சிறந்த மாடல் அழகிப் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து, ரூபிணி சம்பந்தன் என்ற பெண் கலந்து கொள்ளவிருக்கிறார்.

“இம்முறை, மலேசியாவை பிரதிநிதித்து நான் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கின்றேன் என்று அறிந்ததும், இதில் கலந்துக் கொள்ளலாமா, வேண்டாமா? என்ற குழப்பம் என்னுள் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

“குறிப்பாக, எனது  இனத்தை அடிப்படையாக வைத்து  என்னைப்  பலர் கிண்டல் செய்யக் கூடும் என்ற பயம் எனக்குள் அதிகமாகவே இருந்தது. மலேசியாவில் பலர் இனத் தவிர உணர்வுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், அது குறித்து எனக்கு சற்று தயக்கம் இருந்தது.

“ஆனால், மலேசிய மாடல்களில், நான் மட்டும் அப்போட்டியில் கலந்துக் கொள்ள தேர்வாகி உள்ளேன் என்று அறிந்ததும், மலேசிய மக்கள் பலர் எனக்கு ஆதரவு தான் தெரிவித்தனர். எனது இனம் குறித்தெல்லாம் கண்டுக் கொள்ளாமல், பலர் எனக்கு ஊக்கமளித்தனர்” என்று 27 வயதான அந்த மாடல் அழகி தெரிவித்தார்.

“அவர்களின் ஆதரவு எனக்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு குழுவினர், நான் AsNTM6-யில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

“எனது சகோதரர் அண்மையில் காலமாகி விட்டார். அந்தத் துயரத்திலிருந்து இன்னும் நான் முழுமையாக விடுபடவில்லை என்று கூறி, நான் அந்த வாய்ப்பை மறுத்தேன். ஆனால், எனது குடும்பத்தினர், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆலோசனை கூறினர்” என்று அவர் சொன்னார்.

“எனக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன். என்னைப் போன்று மற்ற பெண்களும் தங்களுக்கு வழங்கப் படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்” என்று ரூபிணி கேட்டுக் கொண்டார்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker