Latestஉலகம்

மீண்டும் இன்று லோம்போக் தீவை உலுக்கியது நிலநடுக்கம்!

பெமினாங், ஆகஸ்ட். 9- இந்தோனிசியாவின் சுற்றுலா தீவான லோம்போக்கில் மூன்றவது முறையாக இன்று கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. 6.2 மெக்னியூடிட் அளவில் இருந்த இந்த நிலநடுக்கத்தினால் இந்தத் தீவில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இந்தக் கட்டங்களில் பல ஏற்கெனவே நடந்த இரு நிலநடுக்கங்களில் ஆட்டங்கண்ட நிலையில் இருந்ததவை எனக் கூறப்பட்டது. கடந்த ஞாயிறன்று 6.9 மெக்னியூடிட் அளவில் இந்தத் தீவை தாக்கிய நிலநடுத்தினால் இதுவரை 131 பேர் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மீன்டும் நிலநடுக்கம் குலுக்கியது. மக்கள் பீதியில் வீடுகளையும் கட்டடங்களையும் விட்டு ஓட்டம் பிடித்தனர். இந்தச் சம்பவத்தின் போது கட்டங்கள் சில இடிந்து விழுந்தன. எனினும் புதிய உயிருடற் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker