Latestஉலகம்

இலங்கையில் தங்க மழை! வீதியில் மக்கள் வேட்டை!

கொழும்பு, ஆகஸ்ட்.10- இலங்கையின் கிண்ணியா -கொழும்பு என்ற வீதியின் ஊடாக செல்லும் பிரதான வீதியில் நேற்று பிற்பகல் வேனில் இருந்து பொட்டுப் பொட்டாக தங்கம் வீசப்பட்டுள்ள விசித்திரமான சம்பவம் நடந்தது.

அந்த இடத்தில் வாகனத்தில் பயணித்த சிலர் வட்ட வடிவான தங்க நிறத்திலான சிறிய பொருட்களை வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
வானிலிருந்து விழுந்த இந்த தங்க நிறத்தினாலான முத்துக்கள் மழைத்துளி போல் வீதியின் எல்லா இடங்களிலும் சிதறி காணப்பட்டுள்ளன.

இதை பொறுக்கிய சில இளைஞர்கள் தங்கமா? என்று பரிசோதிப்பதற்காக நகைக் கடைக்கு கொண்டு சென்ற போது, அது தங்கம் என உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவை பழைய காலத்து தங்கமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகின்றது.

இதையடுத்து வீசிச் சென்ற தங்கத்தை சேகரிப்பதற்காக அப்பகுதி மக்களும் வீதியில் குவிந்தனர். அவ்வழியாக வாகனத்தில் செல்வோரும் தகவல் அறிந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி தங்கம் சேகரித்தனர். எனினும், எதற்காக அது வீதியில் வீசப்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker