Latestமலேசியா

ஒரு எம்.பி.யின் மரணத்திற்காக காத்திருக்கின்றேனா? -‘அபத்தம்’ என்கிறார் அன்வார்

கோலாலம்பூர், ஆக.10- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரண விளிம்பில் உள்ளார் என்றும், அவரின் மரணத்திற்காக பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் காத்திருக்கிறார் என்றும் வெளியான தகவலை ‘அபத்தமான பொய்’ என்று அன்வார் வர்ணித்தார்.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால், இடைத் தேர்தல் நடக்கும். அந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் நுழையலாம் என்று அன்வார் கருதுகிறார் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

“தங்களின் தொகுதிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விட்டுக் கொடுக்க தயாராக உள்ளனர். அவ்வேளையில், நான் எதற்காக ஒருவரின் மரணத்திற்காக காத்திருக்க வேண்டும்?” என்று அன்வார் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்திற்கு மீண்டும் வர வேண்டும் என்று தாம் இப்போது எண்ணவில்லை . கட்சித் தேர்தலில் தனது முழு கவனத்தையும் செலுத்தவிருப்பதாக அவர் கூறினார்.

“பக்காத்தான் ஹராப்பான் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டதைப் போல், இன்னும் ஈராண்டுகளில் அதிகார மாற்றம் ஏற்படும். அந்தக் காலக் கட்டம் வரை யாரும் மரணிக்காவிடில், அந்த அதிகார மாற்றம் ஐந்தாண்டுகளில் அரங்கேறும்” என்று அவர் சொன்னார்.

இதனிடையில், நாடாளுமன்ற சீர்த்திருத்தங்கள் குறித்து தாம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தாம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக அன்வார் தெரிவித்துக் கொண்டார்.

“அனைத்து தரப்பினரும் நாடாளுமன்ற அதிகாரங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அமைச்சரவையில் உள்ளவர்களின் அதிகாரங்கள் சார்ந்து முடிவுகள் எடுக்கப் படக் கூடாது” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இதனிடையில், பிரதமர் மகாதீருக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவருக்கு யாரும் எவ்வித நெருக்குதல்களையும் வழங்கக் கூடாது என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker