Latestஉலகம்

கருக் கலைப்பு மசோதா தோல்வி!

புவனஸ் ஏர்ஸ், ஆகஸ்ட்.10- அர்ஜெண்டினாவில் தேர்வு செய்யப்பட்ட சில கருக் கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபையில் தோல்வி அடைந்தது.

சட்டத்திற்கு புறம்பாக கருக் கலைப்பு செய்யும் பெணணுக்கும் மருத்துவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் அர்ஜெண்டினாவில் அமலில் இருந்து வருகிறது.

கருக்கலைப்பின் போது பெண்களின் உயிர் பறிபோவதை தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தங்களுக்கு கருக் கலைப்பு சுதந்திரம் வழங்கக் கோரி கடந்த சில மாதங்களாவே பெண்கள் அர்ஜெண்டினாவில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் போராட்டம் வலுத்ததன் காரணமாக கருக் கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா நாடாளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் 14 வார கருவை கலைக்க சட்டப்பூர்வ அனுமதி உண்டு என்ற அம்சம் இடம் பெற்றிருந்தது.

இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று நடந்த நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் விழுந்தது. இதனால் மசோதா தோல்வியடைந்தது.

உடல் நலம் மிகவும் குன்றிய பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு கருக் கலைப்பு செய்வதற்கு மட்டுமே அர்ஜெண்டினாவில் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker