Latestஇந்தியா

கருணாநிதி இறுதிச்சடங்கு: பரபரப்பான செயலால் பாராட்டை பெற்ற அந்தப் பெண் யார்?

சென்னை, ஆகஸ்ட்.10- கருணாநிதி இறுதிச் சடங்கில் பம்பரம் போல் செயல்பட்ட அந்தப் பெண் யாரெனெ இப்போது தெரிய வந்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்குகள் மரீனாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நடைபெற்றது.

அப்போது ஒரு பெண் அங்குமிங்கும் பம்பரமாக சுழன்று பணிகளுக்கான உதவிகளை செய்தார். அப்பெண் கருணாநிதியின் உறவினர் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், அவர் பெயர் அமுதா என்ற ஐஏந்ஸ் அதிகாரி எனத்
தெரிய வந்துள்ளது.

கலைஞரின் இறுதிப் பயண ஏற்பாடுகளுக்கான பொறுப்பாளாராக அமுதா அமர்த்தப் பட்டிருந்தார். அதாவது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடம் உடல் அடக்கம் செய்வது தொடர்பான அரசு நடைமுறைகளை எடுத்துக்கூறி பரபரப்பாக செயல்பட்டார் அமுதா.

அதோடு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுக தலைவரின் உடல் மரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இதன் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக போர்க்கால அடிப்படையில் செய்து கொடுத்ததோடு இறுதியாக கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரும் ஒரு பிடி மண்ணை அள்ளிப் போட்டார். அமுதாவின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இது குறித்து அமுதா மேலும் கூறியதாவது:

காலையிலேயே அரசிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்துவிட்டது. அதில் யார் யார் என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் எனப் பட்டியல் போடப்பட்டிருந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட பணியானது, சமாதிப் பணிகள் நடக்கும் இடத்தில் வி.ஜ.பி.க்கள் பொதுமக்களை ஆகியோரை ஒருங்கிணைப்பதாகும்.

சமாதிக்கு தேவையான பொருட்களை வெளியிலிருந்து கொண்டு வந்தோம். நேரம் தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. பெரிய தலைவர்களின் இறுதிச் சடங்குகளில் நான் பங்கேற்பது இது மூன்றூவது முறையாகும்.

அப்துல் கலாம் மற்றும் ஜெயலலிதாவின் இறுதி நிகழ்வில் நான் பங்கேற்றுள்ளேன். இது என்னுடைய உணர்வு. நான் தமிழ்நாட்டில் பிறந்தவள். தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ள உணர்வு எனக்கும் இருக்கிறது.

நான் கருணாநிதி மற்றும் ஜெயலிலிதா என இருவரிடமும் வேலை பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவருமே என்னுடைய பணியைப் பாராட்டி இருக்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker