Latestஉலகம்

“ஜன்னல் வழியாக வீசி விடுவேன்” – குழந்தையை மிரட்டிய விமானப் பணியாளர்!

லண்டன், ஆகஸ்ட்.10- விமானம் புறப்படும்போது குழந்தை அழுத காரணத்தால் அக்குழந்தையை விமானத்தில் இருந்து வீசிவிடப் போவதாக மிரட்டிய, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன ஊழியர்கள், பின்னர் அக்குடும்பத்தை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.

லண்டனில் இருந்து பெர்லின் நோக்கி பயணித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த இந்திய தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தைக்கு ‘சீட் பெல்ட்’ அணிவிக்க முற்படுகையில் அக்குழந்தை அழுதது.

எனவே, குழந்தையின் தாய், சீட் பெல்டை கழற்றி குழந்தையை தனது இரு கைகளில் தூக்கி வைத்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போதும் குழந்தை விடாமல் அழுகையை தொடர்ந்துள்ளது.

அங்கிருந்து வந்த விமான பணிக் குழுவைச் சேர்ந்த ஆண் ஒருவர், குழந்தையை கடுமையாக திட்டியுள்ளார். “அழாமல் உட்காரு. இல்லையென்றால் ஜன்னல் வழியாக வெளியே வீசி விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர், இனதூவேஷம் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளார். மேலும் காவலர்களை வரவழைத்து குடும்பத்தினரை விமானத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், விமானப் போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும் போது இந்தப் புகாரை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். எந்த விதத்திலும் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. இது தொடர்பான முழு விசாரணையை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker