Latestமலேசியா

‘ஜாலூர் கெமிலாங்’ கொடியை பெருமையோடு பறக்கவிடுவோம்- துன் மகாதீர்- (video)

கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 61-வது தேசிய தினத்தை முன்னிட்டு நமது ‘ஜாலூர் கெமிலாங்’ தேசிய கொடிகளை பெருமிதத்துடன் பறக்கவிடுவோம் என பிரதமர் துன் மகாதீர் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கொடிகளை பறக்கவிடுவது மீதான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘ஹராப்பான் மெர்டேக்கா’ எனும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. அந்த காணொளியில் துன் மகாதீரும் இடம்பெற்றுள்ளார்.

அந்த ஒரு நிமிடம் 40 வினாடி நீள காணொளியில் இரு சிறுவர்களில் ஒருவர் ‘ஏன் மலேசியர்கள் ஜாலூர் கெமிலாங் கொடிகளை பறக்கவிடுவதில்லை, தாத்தா?’ என துன் மகாதீரிடம் கேட்பார். அதற்கு அவர், ‘இப்போது நாட்டின் சூழல் மாறிவிட்டது. எல்லோரும் மகிழ்ச்சியாக பாதுகாப்பான சூழலில் வாழ்கிறார்கள். அதனால், தேசிய தினக் கொண்டாட்டம் அவர்களுக்கு ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாகிவிட்டது’ என பதிலளித்திருப்பார்.

இவ்வாறு துன் மகாதீர் அந்த இரு சிறுவர்களின் கைகளைப் பிடித்து புத்ராஜெயா ஏரி ஓரமாக வலம் வரும் காணொளி மலேசியர்களின் மத்தியில் தேசிய கொடிகளை பறக்கவிடுவது மீதான நேர்மறை சிந்தனையை விதைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

HARAPAN MERDEKA – AMANAT YAB TUN DR MAHATHIR MOHAMAD KEPADA RAKYAT MALAYSIA SEMPENA BULAN KEBANGSAAN

Video pendek Harapan Merdeka. Dengarkan Harapan YAB Perdana Menteri kepada kita semua rakyat Malaysia!!! #SayangiMalaysiaku #KibarJalurGemilang #JabatanPenerangan

Posted by Jabatan Penerangan Malaysia on Thursday, 9 August 2018

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker