Latestமலேசியா

ஜிஎஸ்டி பணத்தில் ரிம19 பில்லியன் குறைவது உண்மைதான்- சுங்கத் துறை

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.10- வசூல் செய்யப்படும் ஜிஎஸ்டி பணம் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒருங்கிணைங்கப்பட்ட நிதிக் கணக்கில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கணக்கில் 19.4 பில்லியன் ரிங்கிட் குறைவது உண்மைதான் என மலேசிய சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் சுப்ரமணியம் துளசி ஒப்புக்கொண்டுள்ளார். அந்தக் கணக்கில் 63.9 பில்லியன் ரிங்கிட் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் தேதி முதல் 2018-ஆம் தேதி மே 31-ஆம் தேதி வரைக்குமான ஜிஎஸ்டி பணம் 82.9 பில்லியன் ரிங்கிட்டை சுங்கத் துறை கோரி இருந்ததாகவும். ஆனால், முழுப் பணமும் அந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் சேர்க்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் வசூல் செய்யப்பட்ட 18 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி கணக்கில் கொண்டு வரப்படாமல் மாயமாகி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் பரபரப்பான தகவலை வெளியிட்டு இரண்டு நாட்கள் கழித்து, சுப்ரமணியம் அக்குற்றசாட்டுக்கு சாதகமாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker