Latestமலேசியா

‘நோக்கியா பனானா’ கைப்பேசி; மீண்டும் மலேசியாவில் விற்பனை!

கோலாலம்பூர், ஆக.10- மறு பிரவேசம் கண்டுள்ள நோக்கியா 8110 அல்லது நோக்கியா ‘பனானா’ (BANANA) கைத்தொலைபேசி இன்று முதல் மலேசிய கடைகளில் கிடைக்கப் பெறும்.

1996-ஆம் ஆண்டில் வெளியாகிய ‘மேட் ரிக்ஸ்’ திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்ட அந்த பனானா கைத்தொலைபேசி, நோக்கியா நிறுவனத்தின் சிறப்புத் தன்மைக் கொண்டு, புதிய தொழில்நுட்பம் கொண்டு மீண்டும் சந்தையில் மறு பிரவேசம் கண்டுள்ளது.

வாழைப்பழ வடிவில் அமைக்கப் பட்டுள்ள இந்தக் கைத்தொலைபேசி இது பாரம்பரிய ‘கீபோர்ட்’ முறையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. KaiOS எனும் இயங்குதளத்தையும் இந்தக் கைத்தொலைபேசி அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

‘ஸ்மார்ட் போன்’களில் உள்ள வாட்ஸ்-ஆப், முகநூல், டுவிட்டர், கூகள் சேவைகள் மற்றும் யூடியூப் சேவைகள் அனைத்தும் இந்தக் கைத்தொலைபேசியில் கிடைக்கப் பெறும். கருப்பு நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் கிடைக்கப் பெறும் இந்தக் கைத்தொலைபேசி, ரிம.285-க்கு விற்பனை செய்யப் படும்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker