Latestமலேசியா

பாலியல் கொடுமை; காமுகனுக்கு 85 ஆண்டு சிறை, 35 பிரம்படிகள்!

கோலத்திரெங்கானு, ஆக.10- கடை உதவியாளராக வேலைப் பார்த்து வந்த இளம் பெண் ஒருவரை கற்பழித்து, அவருடன் இயற்கைக்கு மாறான உறவு கொண்டதோடு, அக்கடையிலிருந்த பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற 25 வயது ஆடவனுக்கு 85 ஆண்டு சிறை மற்றும் 35 பிரம்படித் தண்டனை விதிக்கப் பட்டது.

அந்த இளம் பெண்ணைக் கற்பழித்தது மீதான முதல் குற்றத்திற்காக, முகமட் நூர்ஹாடி ஓஸ்மானுக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு மற்றும் கொல்ளைக் குற்றச்சாட்டுகளை அந்த ஆடவன் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, அவனுக்கு மொத்தம் 85 ஆண்டுச் சிறை, மற்றும் 35 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப் பட வேண்டும் என்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்மான் முஸ்தாபா தீர்ப்பளித்தார்.

“ திரெங்கானு வட்டார பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழும் முகமட் நூர்ஹாடிக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று” அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஸ்வானி ஸவாவி கேட்டுக் கொண்டார்.

அந்த 23 வயது இளம் பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக, அந்த ஆடவனுக்கு 20 ஆண்டுச் சிறை, 8 பிரம்படிகள் விதிக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து இயற்கைக்கு மாறான உறவு தொடர்பான 3 குற்றச்சாட்டுக்களுக்கு தலா 15 ஆண்டு சிறை மற்றும் தலா 5 பிரம்படிகள் கொடுக்க உத்தரவிடப்பட்டது.

அந்தப் பெண்ணிடம் கொள்ளையடித்தது மீதான 2 குற்றச்சாட்டுகளுக்கு தல 10 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா 5 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்புக் கூறப்பட்டது.

ஆக மொத்தம் 85 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 35 பிரம்படிகள் என்றாலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப் பட்டதால் கூடுதல் பட்சமாக அந்த ஆடவன் 20 ஆண்டுகால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

 

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker