Latestஉலகம்

மகனின் கைப்பேசியில் 300 ஆபாச வீடியோக்கள்; அதிர்ச்சியில் மயங்கிய தாய்!

கொழும்பு, ஆகஸ்ட் 10- பள்ளி மாணவனான  தனது மகனின் கைத்தொலைபேசியில் 300 ஆபாசக் காணொளிகள் இருப்பதைக் கண்ட பார்த்த தாய், அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம், இலங்கையின் பொலன்னறுவை என்ற மாநிலத்தில் நடந்தது.
இங்குள்ள பள்ளி ஒன்றில் உயர் படிவம் பயிலும் மாணவர் ஒருவனின் கைப்பேசியை பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சோதனையிட்ட போது அதில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆபாசக் காணொளிகள் சேமிக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, பள்ளியின் நன்னெறி நடவடிக்கை குழுவினர் மேற்கண்ட மாணவனின் தாயாரிடம் இது குறித்து புகார் அளித்தனர். ஆனால் அந்த மாணவனின் தாயார் தனது மகன் மிகவும் ஒழுக்கமானவன். அவன் அவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டான் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அந்த மாணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசியில் உள்ள காணொளி காட்சிகளை சாட்சிப்பூர்வமாக காட்டியப் போது அந்தத் தாய் தனது மகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துப் போய் மயக்கம் அடைந்தார்.

இதனையடுத்து ஆசிரியர்கள் அவருக்கு முதலுதவி செய்தும் பயனளிக்காமல் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

மாணவனின் தாய் மயக்கத்திலிருந்து தெளிவு பெற்றவுடன் போலீசார் அவசர வாக்குமூலம் பதிவு செய்தனர். தாயையும் மகனையும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் முன்நிலையில் வன்மையாக எச்சரித்தனர். அதே வேளை, ஆபாசக் காணொளி அடங்கிய ‘மெமரி’ கார்டையும் போலீசார் கைப்பற்றினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker