Latestஉலகம்

மனைவியின் இம்சையால் இறந்தது போல் நடித்த கணவன்!

வாஷிங்டன், ஆகஸ்ட் 10- மனைவி தொடர்ந்து பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததால், கணவர் ஒருவர் தான் இறந்தது போன்று புகைப்படங்கள் எடுத்து அவருடைய மனைவிக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர் டேனி கொன்சேல் (வயது 27) தற்போது இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக கூறி, அவர் தொடர்பான புகைப்படங்கள் மத்திய அமெரிக்காவில் இருக்கும் அவரது மனைவிக்கு அனுப்பப்பட்டது.

அப்புகைப்படங்களில் அவரது மூக்கில் பஞ்சு மற்றும் வாயில் ஒரு வெள்ளை நிற பேப்பர் போன்று வைக்கப்பட்டிருந்தது. புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா காரணமாக இறந்து விட்டார் என்ற தகவல் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அவரின் உறவினர் ஒருவர் அந்தப் புகைப்படங்களை நன்றாக உற்றுப் பார்த்து சந்தேகத்தைக் கிளப்பினார்.

இதையடுத்து உள்ளூர் பத்திரிகை அலுவகலம் ஒன்றின் உதவியை நாடி அந்தப் டத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த போது அவர் இறக்கவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டது.

தான் கையும் களவுமாக பிடிபட்டதைத் தொடர்ந்து டேனி கொன்சேல்ஸிடம் விசாரித்த போது, “என் மனைவி வாரந்தோறும் எனக்கு பணம் அனுப்புமாறு தொல்லை பண்ணுவார். நானும் அதை எல்லாம் மீறி அனைத்தும் செய்வேன். ஆனால் சமீபத்தில் அவளின் நடவடிக்கை எல்லை மீறியதால் இது போன்று செய்தேன்” என்று சங்கடத்துடன் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker