Latestமலேசியா

முதலாளியின் கொடுமையால் மனநோய்க்கு ஆளான இந்திய பிரஜை

கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- வயிற்றுப் பிழைப்பிற்காக மலேசியா வந்த இந்திய நாட்டவர் ஒருவர் தனது முதலாளியால் சித்ரவதைக்குள்ளாகி கடைசியில் மனநோய்க்கு ஆளாகியுள்ளார். அக்பர் அலி கஜா மொகிடின் என்ற அந்த 31 வயது ஆடவர் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேராக், சித்தியவானில் உள்ள ஓர் உணவகத்தில் வேலை செயவதற்கான அனுமதியுடன் அக்பர் கடந்த 2012-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்திருக்கிறார். ஆனால், இங்கே வந்ததும் அக்பரை சுற்றுலா முகவர் நிறுவனம் ஒன்றில் டிக்கெட் விற்கும்படி அவரது முதலாளி உத்தரவிட்டிருக்கிறார்.

அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து அக்பரை அவரது முதலாளி உடல் ரீதியகாவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்திருக்கிறார். அதனால், மன ரீதியாக பாதிக்கப்பட்ட அக்பர் சித்தியவான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் இருந்து தனது மனைவி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அனுப்பும் மனநோய்க்கான மருந்துகளையும் சாப்பிட்டு வந்திருக்கிறார். அந்த மருந்து மட்டுமே 237 ரிங்கிட் அக்பர் கூறியுள்ளார். செலவு அதிகரித்ததாலும், உடல் நிலை சரியில்லாததாலும் தன்னை சொந்த ஊருக்கே அனுப்பி வைக்குமாறு அக்பர் தனது முதலாளியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது முதலாளி மறுத்துவிட்டாராம்.

அதுமட்டுமின்றி, கடந்த இரு மாதங்களாக சம்பளத்தையும் தரவில்லை என்றும் தனது கடப்பிதழை பிடுங்கிக் கொண்டதாகவும் அக்பர் தெரிவித்துள்ளார். பணத்தை திருடிவிட்டதாக பழி போலிசில் புகார் செய்து விடுவேன் என்றும் அந்த முதலாளி அக்பரை மிரட்டியுள்ளார்.

இம்மாதம் முதலாம் தேதி, அக்பர் பயத்தில் அங்கிருந்து தப்பித்து கோலாலம்பூருக்கு பேருந்தில் வந்து விட்டாராம். செய்வதறியாது திபிஎஸ் பேருந்து முனையத்தில் அழுது கொண்டிருந்த அக்பரை தமது தரப்பினர் கோலாலம்பூரில் சேர்த்ததாக ‘HUMANITY’ எனப்படும் மனிதநேய அமைப்பின் தலைவர் தி.கமலநாதன் குறிப்பிட்டார். இது குறித்து செலாயாங் போலிஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனிடையே, அக்பரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கமலநாதன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker