Latestமலேசியா

ரிம.18 பில்லியன் GST பணம்: அவதூறு பரப்பாதீர்! –வீ கா சியோங்

கோலாலம்பூர், ஆக.10- ஜி.எஸ்.டி வரிப் பணத்திலிருந்து ரிம.18 பில்லியன் பணம் காணாமல் போனதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று மசீச துணைத் தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதனைக் காரணமாக வைத்துக் கொண்டு, அரசாங்கம் அடிப்படையற்ற அவதூறுகளை பரப்பக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

“அவ்விவகாரம் தொடபில் குற்ற புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், அந்தப் பணத்தை முந்தைய அரசாங்கம் கொள்ளையடித்து விட்டது என்று எந்த ஆதாரமுமின்றி கூறக் கூடாது” என்று அவர் கூறினார்.

“அவ்விவகாரத்தை விசாரணை செய்ய வல்லுநர்கள் நியமிக்கப் பட வேண்டும். அது குறித்து போலீஸ் புகார் செய்துள்ள ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைய்ரி ஜமாலுடினுக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம்” வீ கா சியோங் சொன்னார்.

அந்த 18 பில்லியன் ரிங்கிட் பணத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கொள்ளையடித்து விட்டது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகாரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker